நீரிழிவு நோய்க்கு புதிய மருந்து!

0
13

நீரிழிவு நோய்க்கு எதிரான புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதில் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தப் புதிய தீர்வு பெரும் உதவியாக இருக்கும் எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இன்சுலினிற்குப் பதிலாக இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறையைப் பயன்படுத்திப் பல மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தப் புதிய முறை வெற்றியடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here