விரஞ்சித் தம்புகலவுக்கு கொலை மிரட்டல்?

0
7

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய வர்த்தகர் விரஞ்சித் தம்புகல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் இன்று (03) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா பத்திராஜா முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இது தொடர்பாகத் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட கருத்துக்களைப் பரிசீலித்த நீதவான், எதிர்வரும் 10 ஆம் திகதி உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here