ரஷ்யாவில் நேற்று முன்தினம் (31) காணாமல் போன எம்ஐ-8டி ரக வானூர்தி விபத்திற்குள்ளானதில், வானூர்தியில் பயணித்த 22 பேரும் உயிரிழந்தனர்.
காணாமல்போன நிலையில் தேடப்பட்டு வந்த ரஷ்யாவின் எம்ஐ-8டி ரக வானூர்தி கிழக்குக் கம்சட்கா பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த வானூர்தியில் 3 பணியாளர்கள் உட்பட 22 பேர் பயணித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த வானூர்தியைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
வானூர்தி விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வானூர்தியின் பாகங்கள் கண்டறியப்பட்டதுடன், மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.