ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான தாலிபான் அடக்குமுறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது உலகம் முழுவதும் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. அண்மையில், பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்யவும், குர்ஆன் ஓதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு வேலை, கல்வி, மற்றும் சமூக உரிமைகளில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
உணவுப் பற்றாக்குறை, வேலை வாய்ப்பின்மை, மற்றும் பொருளாதார சீரழிவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் ஐநா சபையும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.