வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் ராஜினாமாவை அந்நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. வோ வான் துவாங் அந்நாட்டின் ஜனாதிபதியாக ஓராண்டு மட்டுமே பதவி வகித்துப் பதவி விலகியுள்ளமை விசேடம்சமாகும். இதனிடையே கட்சியின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங் செயற்பட்டுள்ளதாகக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வௌியிட்ட தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகக் கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.