உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வீழ்த்தியதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
இம்முறை நடைபெறும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் அவர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவார் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் அவருக்கு விளையாட இடமளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்ற போதும், அவை எவையும் உறுதியானவை இல்லை என்று கூறப்படுகிறது.