தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காகப் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு அரச செலவில் உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படுமாயின் அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல் கடமைகள் அல்லாத வேறு நடவடிக்கைகளுக்காக அரசின் உலங்கு வானூர்திகளைப் பெற்றுக் கொள்வோருக்கு எவ்வித தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.