தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் 13 ஆம் திருத்தத்தை நிறைவேற்றியே தீருவேன் என எதிர் கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனிடம் தெரிவித்த நிலையில் தற்போது அரசியலமைப்பின் பிரகாரம் உள்ள 13 ஆம் திருத்தம் வேண்டாம், உங்கள் அப்பா ரணசிங்க பிரேமதாசா பறித்த பதின்மூன்றின் அதிகாரங்களையும் சேர்த்து தருவீர்களா என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்
யாழ்.நல்லூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ்வரனின் இல்லத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் சஜித் பிறேமதாச என்னைச் சந்திக்க ஐந்து மணிக்கு வருவதாகக் கூறி ஏழுமணிக்கே வந்தார் சில சந்திப்புக்கள் திடீரென ஏற்பாடு இடம்பெற்றதாக அறிந்தேன். நான் அவரிடம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடையங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களைக் கூறினேன் அவர் மெளனமாகக் கேட்டார் பதில் வழங்கவில்லை. 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேசியபோது பதின்மூன்றை நடைமுறைப்படுத்துவேன் எனத் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கிவிட்டேன் அதை உங்களிடம் கூறுவதற்காகவே வந்தேன் என்றார். நான் அவரிடம் கூறினேன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக 13வது திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட பதின்மூன்றை தக்கவைத்தாவது தமது இருப்புக்களைப் பாதுகாக்கலாம் என்ற நோக்கத்திற்காக வேண்டும் என்றேன். நீங்கள் கூறும் தற்போதைய பதின்மூன்று எமது மக்களுக்கு வேண்டாம் உங்கள் தந்தை ரணசிங்க பிரேமதாசா காலத்தில் பதின்மூன்றாவது திருத்தத்தில் இருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அதாவது மாகாண நிர்வாகத்தின் கீழ் இருந்த அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர் போன்றவற்றை மீண்டும் மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்றேன்.
எல்லாவற்றையும் மெளனமாகக் கேட்டார் செய்வேன் செய்யமாட்டேன் எனப் பதில் கூறவில்லை தன்னை நம்புங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.