இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது T20 போட்டியில் இலங்கை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் சிகர் தவான் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

மினோத் பானுக 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இதற்கமைய, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட T20 தொடர் 1-1 கணக்கில் தற்போது சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.