கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இந்திய அணி வீரர் குருனால் பான்டியவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 8 பேரின் பெயர் விபரங்கள் வௌியிடப்படாத போதிலும் அவர்களை இறுதி T20 போட்டிகள் இரண்டில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதி T20 போட்டிகள் இன்றும் நாளையும் கெத்தாராம விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.