காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 250 நாட்களைக் கடந்துள்ள நிலையில் சுமார் 15,694 சிறுவர்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17,000 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5 வயதிற்குட்பட்ட 8,000 சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.