பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’.

இப்படத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் கொக்கேன், சபீர், கலையரசன், ஜான் விஜய், துஷாரா விஜயன், சஞ்சனா நட்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

சார்பட்டா பரம்பரைக்கும் இடியாப்ப பரம்பரைக்கும் இடையே நடக்கும் பாக்ஸிங் தொடர்பான கதையை 1970களில் நடப்பது போல் படமாக்கி இருந்தார்கள்.

இப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

தற்போது இப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா, ‘சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது…

வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது! வாழ்த்துகள்!’ என்று சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.