மேகதாது அனை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இதனால் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே மேகதாது அணை விவகாரம் உச்சத்தில் இருக்கிறது.

இதனிடையே மேகதாது அனை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தஞ்சாவூரில் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் திகதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.